நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். கை கால்ல்லாம் வந்து ஏதோ பூச்சி ஊடுற மாதிரி இருக்கு அப்படின்னு சில பேர் சொல்லுவாங்க. டிங்கலிங் இன் லெக்ஸ் அண்ட் ஆர்ம்ஸ்ன்னு சொல்லுவோம். இப்ப மாதிரி ஒரு சென்சேஷன் குறிப்பா வந்து கீழ் பகுதியில கையோட கீழ் பகுதியில கால்களோட கீழ் பகுதியில இதே மாதிரி முட்டிக்கு கீழ வரும்.
எப்பவும் பசியே எடுக்காத மாதிரி
உணர்வு இருக்கும். அடிக்கடி கோவம் வரது கண்ணு
மங்கலா தெரியறது. சீக்கிரம் சோர்வடையறது குழப்ப மனநிலை இதுக்கெல்லாம்
வந்து பின்னாடி அரிசி ஒரு பெரிய
காரணமா இருந்திருக்கு.
இந்த வெள்ளை அரிசி மற்றும் பழுப்பு அரிசி ரெண்டு அரிசியுமே வந்து நெல்லில இருந்து வர்துதான்.
ஆனா இந்த அரிசி மட்டும் ஏன் வெள்ளை வெளையர்ன்னு இருக்கு. ஏன்னா இந்த வெள்ளை அரிசிக்கு பின்னாடி ஒரு ரகசியம் இருக்கு. அந்த ரகசியம்தான் நம்ம சாதம் சாப்பிட்டா மூளைக்கு நல்லதா கெட்டதா அப்படிங்கிற கேள்விக்கான முழு பதிலும் அந்த ரகசியத்திலதான் இருக்கு. மேலும் வெள்ளை அரிசி சாதம் சாப்பிட்டா சர்க்கரை நோய் அதிகமா வரும் அப்படின்னு சொல்லிட்டு அது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் வெள்ளை அரிசி சாதம் அதிகமா சாப்பிடும்போது டிமன்சியா ஞாபக மருதி நோய் அதிகமா வருது அப்படின்னு ஒரு விஷயம் இருக்கு.
வாட்ப் YouTubeல எல்லாம் பரவலா
இந்த தகவல்கள் பெரிய அளவுல வரும்போது
நிறைய பேர் பயப்படக்கூடிய வாய்ப்பு
இருக்கு. நான் வாழ்நாள் முழுக்க
இந்த அரிசி சாதம் தான
சாப்பிட்டேன் அப்ப எனக்கு ஏதாவது
பிரச்சனை வருமோ அப்படின்னு நினைக்கக்கூடிய
வாய்ப்பு இருக்கு.
நான் உங்களுக்கு சில உண்மைகளை சொல்ல போறேன். இதை நம்ம சரியா செயல்படுத்தும் போது இதை செய்முறையை நான் சொல்றேன்.
எப்படி நம்ம சாப்பிடணும் அப்படிங்கிறது.
அந்த செய்முறையை சரியான முறையை நம்ம
பின்பற்றும் போது பல விஷயங்களை
தடுக்கலாங்க. இப்போ சர்க்கரை நோய்
வருதோ இல்லையோ அது வராம
நம்மளால தடுக்க முடியும். ஞாபகவருதி
நோய் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்ன
பண்ணலாம்ங்கறத சொல்ல முடியும்.
முதல்ல ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிடுறேன். அதாவது சாதம் சாப்பிடுவதால் நம்மளுக்கு மறதி நோய் வரும் அப்படின்னு சொல்லுவது. அதனால நேரடியா மறதி நோய் டிமென்சியா வராது. அல்ஜிமர்ஸ் வராது. ஆனா இதுல சில உண்மைகள் இருக்கு. யோசிச்சு பாருங்க ஜப்பான், சீனா போன்ற நாடுகள்ல வந்து சாதம்தான் பிரதான உணவே.
அங்கெல்லாம் வந்து ஜப்பான்ல 100 வயசுக்கு மேல வாழக்கூடியவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. கோடிக்கணக்கான மக்கள் வாழ்நாள் முழுக்க சாதம் சாப்பிட்டுட்டு இருக்காங்க. குறிப்பா வெள்ளை அரிசி சாதம்னால டிமென்ஷியா வரும் மறதி நோய் வரும் அப்படின்னா ஜப்பான் முழுக்க ஞாபக மருதி நோய் இருக்கணும். அப்படி கிடையாது இல்லையா சரிங்க பர்ஸ்ட் ஒரு ஒரு பாயிண்ட்டா நம்ம டீல் பண்ணுவோம்.
ஃபர்ஸ்ட் சாதம் சாதம் ஏன் வந்து மறதி நோய் வருவதற்கு ஒரு காரணமா அடிக்கடி பேசப்படுது அப்படின்னா அதுக்கு டைரக்டா சாதம் காரணம் கிடையாது. அதுக்கு காரணம் ரத்த சர்க்கரை அளவுகள். குறிப்பா வெள்ளை அரிசி சாதம் அப்படிங்கறது எளிதாக ஜீரணம் ஆகக்கூடியது அப்படியே ரத்த சர்க்கரை இலையை வேகமாக ஜிவ்வுன்னு ஏத்தக்கூடியது. இப்படி அடிக்கடி நம்ம ரத்த சர்க்கரை அளவு வேகமாக ஏறும்போது பிரச்சனை உண்டாகுது.
குறிப்பா இந்த வெள்ளை அரிசி வந்து ஒரு ரீபைன்ட் கார்போஹைட்ரேட் சுத்தீகரிக்கப்பட்ட மாவுச்சத்து. இது மிக வேகமா செரிமானமாகும். ரத்தத்துல சர்க்கரை அளவை மிக வேகமா ஏற்றும். நம்ம சாப்பிடும்போது அதிக அளவு சாதம் மட்டும் வச்சுக்கிட்டு நம்ம பிளேட்ல மற்ற விஷயங்களை சேர்க்காம விடும்போது வரக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை இது.
யாரோ ஒருத்தர் வந்து இந்த காய்கறி, கீரைகள், பழங்கள் போன்ற விஷயங்களை ரொம்ப குறைவா வச்சுக்கிட்டு தட்டு முழுக்க சாதம் அப்படின்னு சாப்பிடுறாங்களோ அவங்களுக்கு பிரச்சனை ஜாஸ்தி ஏன்னா அந்த காய்கறிகளுக்கு உண்டான இடமே அங்க இல்லை. கீரைகளுக்கு உண்டான இடமே இல்லை. பழங்களுக்கு உண்டான இடமே அங்க கிடையாது தட்டுல. எல்லாமே சாதம்தான். இப்படி நம்ம தொடர்ந்து இந்த பழக்கம் இருக்கும்போது அது காலப்போக்குல ரத்த சர்க்கரை அளவை ஏத்தி ஏத்தி ஏத்தி இறக்கி ஒரு ஸ்டேஜ்ல வந்து இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகமாவே இருக்கிற மாதிரி ரெசிஸ்டன்ஸ் உண்டாகுது.
இன்சுலின் எதிர்ப்பு திறன் உண்டாகுது. இதனால வந்து நம்ம சர்க்கரை எரிக்கப்பட புனியாம போகுது. இதனால இரத்த சர்க்கரை அளவு ஏறி பல பிரச்சனைகளை உண்டாக்குது. அதுல ஒரு பிரச்சனை ஞாபக மறதியும் அடக்கம் இதுல. அரிசி சாதம் மட்டும் இல்லைங்க. அதிக கிளைசீமிக் லோடு கொண்ட எல்லா உணவுகளுமே, காலப்போக்குல காக்னிட்டிவ் டிக்லைன் அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு விதமான மூளையோட சோர்வு.
இதை வந்து அதிகப்படுத்துது. காலப்போக்குல. பிற்காலத்துல உடனே தெரியாது. இது குறிப்பா ஒரு விதமான மரபணு இருக்கிறவங்களுக்கு அதிகமா வருது. இந்த காக்னிட்டிவ் டிக்லைன் மூளையோட சோர்வு அப்படிங்கறது ஞாபக மரத்து அப்படிங்கிறது. அதனால இங்க பிரச்சனை வந்து சாதம் கிடையாது. வேகமாக சர்க்கரையை ஏற்றக்கூடிய சமநிலை இல்லாத உணவு. அந்த சமநிலை இல்லாம போகும் போதுதான் பிரச்சனை.
இப்ப ஜப்பானோ, சீனாவோ எடுத்துக்கிட்டீங்கன்னா, காய்கறிகளும் அவங்க உணவு முறையில ஜாஸ்தியாதான் இருக்கும். சாதத்துக்கு ஒரு குறிப்பிட்ட பங்கு இருக்கு. வள்ளநாள் முழுக்க சாதம் சாப்பிடுறாங்கதான். ஆனா அதுக்காக வெறும் சாதத்தை மட்டும் அவங்க சாப்பிடுறது கிடையாது இல்லையா? இப்ப எல்லா விதமான புரதங்களோ, புரோட்டீனோ, வெஜிடபிள்ஸோ, காய்கறிகளோ கட்டாயம் அந்த உணவு பிளேட்ல இருக்கும். இல்லாம இருக்கவே இருக்காது.
அது ஒரு பார்ட் சாதம்ங்கறது. நம்மளுக்கு சாதம் ஒரு பெரிய பார்ட்டா இருக்கு. அது மட்டுமே இருக்கு. மத்ததெல்லாம் குறைவா இருக்கு. அதுதான் விஷயம். சமநிலை இல்லாத உணவு. சாதத்தோட சேர்த்து கீரை, காய்கறிகள், பருப்பு, மீன், முட்டை ஏதாவது ஒன்னு இந்த மாதிரி நம்ம சாப்பிடும்போது குறிப்பா பழங்கள், காய்கறிகள் நிறைய சேர்த்துக்கறவங்களுக்கு இந்த ஞாபக மருதி நோய் அப்படிங்கறது பெரிய அளவுல குறையுது.
வராம தடுக்கப்படுது. அதனால சாதம் நம்மள ஒன்னும் பண்ணல. ஆனா சாதம் நம்ம தட்டு முழுக்க ஆக்கிரமிச்சு மத்த உணவுகளுக்கு இடம் கொடுக்காம போகும்போது, நம்மளுக்கு பிராப்ளம் வருது. அதனால தீர்வு ஒன்னே ஒன்னுதான். 9 in நம்ம வந்து இந்த தட்டோட அகலம் வந்து எப்பவுமே நான் சொல்லிருக்கேன் அடிக்கடி சொல்லுவேன் 9 in அகலம் உள்ள ஒரு தட்டு இதை வாங்கி வச்சுக்கோங்க இதை வந்து நம்ம வந்து நாலா பிரிச்சோம் அப்படின்னா இந்த நாலு பங்குல வந்து ஒரு பங்குக்கு மட்டும்தான் நம்மளுக்கு சாதம் அப்படிங்கறதுக்கே இடம் இருக்கு.
மீதி விஷயங்கள் இருக்கு பாத்தீங்களா இங்க இங்க வந்து பழங்கள் காய்கறிகள் போன்ற விஷயங்களுக்குதான் இடை இருக்கு குறிப்பா வந்து நான் ஸ்டார்ச்சி வெஜிடபிள்ஸ் அதாவது உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் கூட தட்டோட இந்த கால் பங்குல வருது. மீதி இருக்கக்கூடிய காய்கறிகள் இருக்கு பாத்தீங்களா காய்கறிகள் கீரைகள் அதுல எல்லாம் மாவு சத்து ரொம்ப ரொம்ப குறைவா இருக்கோ அதெல்லாம் இந்த பக்கம் வருது.
அப்புறம் இன்னொரு பக்கம் இங்க முட்டைக்கு இடம் உண்டு முட்டையோ ஒரு சிக்கன் பீஸோ இல்ல மீனோ ஏதாவது ஒன்னு புரதம் வந்து ஒரு குவார்ட்டர்ல கண்டிப்பா இருக்கணும். பாலோ ஏதோ ஒன்னு இந்த குவார்ட்டர்ல வச்சுக்கணும். ஆனா மீதி ஃபுல்லா வந்து காய்கறிகளா இருக்கணும். சோ இந்த ஒரு மெத்தட நம்மஃபாலோ பண்ணனும் அப்படினாதான் நம்மளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது.
எப்பவுமே ஏற்படாது. ஆனா நம்ம யாராவது இவ்வளவுண்டு சாதத்தை வச்சு இவ்வளவு காய்கறிகள் வச்சு சாப்பிடுறோமா கிடையவே கிடையாது. அடுத்து மிக முக்கியமான பாயிண்ட் இதுதாங்க இந்த ரைஸ். இந்த ரைஸ பொறுத்தவரைக்கும் வெள்ளை அரிசியோட இந்த பழுப்பு நிற அரிசிகளோ, சிவப்பு அரிசியோ, கருப்பு கவனி அரிசியோ, கை கொத்தல் அரிசியோ, பாரம்பரிய அரிசிகள் எல்லாமே எல்லாம் ஒரே நிலில இருந்து வருது அப்படினாலும் இந்த பாரம்பரிய அரிசிகள் இந்த வெள்ளை அரிசி அளவுக்கு மிக அதிகமா இரத்த சர்க்கரை அளவை ஏற்றுவது கிடையாது அப்படிங்கறது எல்லாராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம். சோ, இந்த
மாதிரி பழுப்பு அரிசிகள், சிவப்பு அரிசி, கருப்பு கவுனி இதை எல்லாம்தான் முழுதானியங்கள் அப்படின்னு சொல்றோம். ஹோல் கிரைன்ஸ். இதே வெள்ளை அரிசி வந்து பாலிஷ் செய்யப்பட்டதுனால இது ஹோல் கிரைன் கிடையாது. இதோட மேட்டருக்கு இன்னும் அடுத்து வரேன் நானு. பட் அதிகமா பாலிஷ் செய்யப்படாத இந்த அரிசிகள்ல போதுமான அளவு சத்துக்கள் நம்மளுக்கு கிடைக்குது.
தேவையான அளவு சத்துக்கள் நரம்புகளுக்கு தேவையான விஷயங்கள் பல விஷயங்கள் இதுல இருக்கு. 3326 பேர வச்சு இந்த சிக்காகோல நடத்தப்பட்ட ஆராய்ச்சி இதுல வந்து ஆறு வருஷமா யாரெல்லாம் இந்த ஹோல் கிரைன்ஸ் அதிகமா சாப்பிட்டாங்களோ அவங்களுக்கு வந்து மூளை சோர்வு வருவது குறைஞ்சிருக்கு. கம்பேர்டு டு இந்த பிரெட், ரீபைன்ட் கார்போஹைட்ரேட்ஸ் இதையெல்லாம் சாப்பிடுறதவிட ஹோல் கிரைன்ஸ் யாரெல்லாம் எடுத்துக்கிட்டாங்களோ அவங்களுக்கு இந்த மூளை சோர்வு ஞாபக சக்தி குறையறது இதெல்லாம் நல்லாவே கட்டுப்படுது வராம தடுக்கப்படுது அப்படிங்கறது ப்ரூவ் பண்ணப்பட்டிருக்கு. பொதுவா ஹோல் கிரைன்ஸ்ல
வந்து எந்த தானியும் கிடையாது. எல்லா முழு தானியங்களும் பாலிஷ் செய்யப்படாத எல்லா முழு தானியங்களுமே நல்லதுதான். இப்போ மெயினா வந்து இந்த பழுப்பு அரிசிக்கும் இந்த வெள்ளை அரிசிக்கும் என்ன விஷயம்ங்க அந்த தவிடு நம்ம நீக்குறோம்னு வைங்களா அந்த மேல்தோல நீக்கி பாலிஷ் நல்லா பண்ணி அரிசிய எடுக்குறோம். அப்படி பாலிஷ் பண்ணும்போது என்ன ஆகுது வைட்டமின் ப1 அப்படின்னு நம்மளுக்கு மிக மிக அத்தியாவசிய தேவையான ஒரு வைட்டமின் சத்து பாலிஷ் செய்யப்படும்போது ஓடி போயிடுது கரைஞ்சு போயிடுது.
மேலும் இந்த பழுப்பரசியோட வெளி அடுக்குல இருக்கக்கூடிய சத்துக்கள் பெரோலிக் ஆசிட் காமா ஆரிசனால் போன்ற பல பொருட்கள் அதெல்லாம் வந்து மருத்துவ குணம் வாய்ந்தது அப்படின்னு சொல்லப்படுது அல்சைமர் நோய் எல்லாம் வராம தடுக்க கூடியது. அதுக்காக பழுப்பரிசி அல்சைமர் நோய் வந்து குணப்படுத்தல்லாம் நான் சொல்ல வரல. அதெல்லாம் வந்து தடுக்கும் ஓரளவு தடுக்கும்.
அடுத்து மிக மிக முக்கியமான ஒரு வரலாற்று பாடத்துக்குள்ள வருவோங்க அதுதான் வந்து இந்த வெள்ளை அரிசி ஒரு காலத்துல வந்து இப்ப நான் எம்பிபிஎஸ் படிக்கும்போதே 1997 அப்பயே வந்து நாங்க இந்த பேஷன்ட்ஸ் பார்த்திருக்கோம் அதாவது ப1 டெபிசியன்சி உள்ள வைட்டமின் ப1 டெபிஷயன்சினால வரக்கூடிய பெரிபெரி அப்படிங்கிற ஒரு நோய் இருக்கு.
இது வந்து நரம்புகளை பாதிக்கக்கூடிய ஒரு நோய். நான் சொன்னேன் இல்லையா கை கால் மரத்து போகுது டிங்கலிங் இருக்கிறது. ஒரு மாதிரி பூச்சி ஊடுற மாதிரி இருக்குது டாக்டர் அப்படின்பாங்க கைகளல்ல கால்கள்லல்லாம் இந்த பூச்சி ஊறுவது போன்ற உடல் உணர்வு. பசியே எடுக்கல சுத்தமா பசியே இல்லை அப்படின்பாங்க. சாப்பிடுறது ஜீரணம் ஆகுற மாதிரியே இல்லை அப்படின்பாங்க.
ஒரு விதமான நரம்புகள் பலவீனம் உண்மையிலேயே உண்டாகுது. குழப்ப மூளை குழப்ப மனநிலையில இருக்கு டெலீரியம். ஞாபக சக்தி பிரச்சனை. இது எல்லாமே இருக்குது. சோ இது வந்து பெரிபெரி அப்படின்னு சொல்லுவாங்க. இது ரெண்டு விதமா இருக்கும். ட்ரை பெரிபெரி வெட் பெரிபெரி அப்படின்னு சொல்லிட்டு ட்ரைபெரிபெரி அப்படிங்கறது நரம்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையை ஏற்படுத்தும்.
வெட் பெரிபெரி அப்படிங்கறது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனா இன்னைக்கு ரொம்ப அரிதாதான் நம்ம பார்கறோம். ஆனா அன்னைக்கு நிறையவே இந்த மாதிரி பெரி பெரி இந்த வெள்ளை அரிசிதான் அன்னைக்கு நிறைய சாப்பிட்டாங்க. ரொம்ப எக்ஸ்ட்ரார்டினரியா அதிகமா சாப்பிட்டாங்களா என்னன்னு எனக்கு தெரியல. ஆனா நிறைய பார்த்தோம். ஆனா இப்ப வந்து குறைஞ்சுகிட்டு வருது.
மெயின் காரணம் என்ன சொல்லப்படுது அப்படின்னா அரிசி சாதத்தோட சேர்ந்து இன்னைக்கு நாம்ம எடுத்துக்கக்கூடிய ஓரளவு அவேர்னஸ் வந்து எடுத்துக்கக்கூடிய இப்ப பழங்கள் காய்கறிகள் பல விஷயங்களை சேர்த்து எடுத்துக்கிறதுனால ஓரளவு இந்த பிரச்சனை இன்னைக்கு கட்டுக்குள்ளதான் இருக்கு. ஆனாலுமே இன்னைக்கு நிறைய டாக்டர்கள் இதை மறந்தே போயிட்டாங்கங்கிற அளவுக்கு இது ரொம்ப அரிதாகி போனாலும் பெரி பெரி அப்படிங்கிற நோய் குறித்து எல்லாருக்கும் புரிதல் அவசியம்.
அது வந்து குறிப்பா இந்த தமிழ்நாட்டுல நம்மள மாதிரி பாப்புலேஷன்ல வெறும் வெள்ளையரிசி சாதம் அதிகமா சாப்பிட்டவங்கல மிக அதிகமா காணப்பட்ட ஒரு நோய் இப்பயும் இருக்கு. ஆனா மேபி அண்டர் டயக்னோஸ்டா இருக்கலாம். ஆனா எல்லாருக்கும் இந்த நோயை பத்தி தெரிஞ்சிருக்கணும். இந்த நோய் எல்லாம் வராம தடக்கணும்னா இதுக்கு முன்னாடி நான் காமிச்சேன் பாருங்க ஒரு பிளேட் அந்த பிளேட் எல்லாம் ஃபாலோ பண்ணீங்கன்னா இந்த பெரிபெரி அப்படிங்கற விஷயம் எல்லாம் வர்துக்கு வாய்ப்பே கிடையாது.
நரம்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனை வர்துக்கு வாய்ப்பே கிடையாது. சரி எப்படி நம்ம இதை வந்து நம்ம சமையல் முறைக்குள்ள கொண்டு வரலாம். அதாவது வெள்ளை அரிசி சாதம் தானங்க சாப்பிட்டுட்டு இருக்கறோம். நாங்க என்னங்க பண்றது அப்படிங்கறவங்களுக்கு இந்த வெள்ளை அரிசி சமைக்கும் போது மிக்ஸ் பண்ணலாம் அப்படிங்கறது ஒரு கருத்துங்க. அதாவது வெள்ளை அரிசி ஒரு பாதி மீதி பாதி வந்து பழுப்பு அரிசி, கருப்பு கவனி, சிவப்பு அரிசி, பழுப்பு அரிசி எந்த விதமான அரிசி அதாவது ரெண்டு அரிசியை கலங்கலையும் 50 50% எது 50% அதுன்னு வச்சீங்கன்னா உங்களுக்கு வந்து டேஸ்ட்ல கொஞ்சம் மாறுபாடு இல்லாம
இருக்கும். நிறம் கொஞ்சம் மாறுபாடு காட்டலாம். ஆனா வந்து டேஸ்ட்ல பெருசா மாறுபாடு இருக்காது. ஆனா உங்களுக்கு தேவையான சத்து கிடைச்சிடுது. இது ஒரு ரெக்கமெண்டேஷன்ங்க. 50 50 பாரம்பரிய அரிசியல் வகைகளும் பாலி செய்யப்பட்ட அரிசியும் சேர்த்து நம்ம சமைக்கிறது நல்லது. ரெண்டாவது பேலன்ஸ்டு பிளேட் டயட் பிளேட் நான் உங்களுக்கு காமிச்சது.
சாத கால்பங்கு கீரை, காய்கறி, பருப்பு அல்லது மீன், முட்டை வகைகள் ஏன் விதைகள் கூட நம்ம எடுத்துக்கிறது கிடையாதுங்க. இந்த சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், ஆதி விதைகள், பலவிதமான விதைகளுக்கு நிறைய ரோல் இருக்கு. நியூட்ரிஷன்ல குறிப்பா நரம்புகள் எல்லாம் வந்து நல்லா வலிமையா வச்சுக்கிறதுக்கு, ஆரோக்கியமா வச்சுக்கிறதுக்கு விதைகள் எல்லாம் நம்ம டெய்லி ஒரு 5 டு 10 g நம்ம எடுத்துக்கிறது ரொம்ப ரொம்ப நல்லது.
அதெல்லாம் நம்மளோட தினசரி பழக்கத்திலயே கிடையாது இல்லையா அதை இன்குலூட் பண்ணுங்க. ஆக இந்த வீடியோ மூலமா அரிசி சாதம் குறித்த பல விஷயங்களை நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்க. அதே சமயம் ஞாபக மருதி நோய்க்கு வந்து வெறும் அரிசி சாதம் காரணம் இல்லைங்கிறத நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்க. கூடவே உணவு மட்டும் இல்லைங்க. வயது, உடற்பயிற்சி இல்லாமை, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருக்கிறது.
காது கேளாமை, தூக்கமின்மை பிரச்சனை,
தனிமை இதெல்லாம் கூட ஞாபக பரதி
நோய் வரதுக்கு ஒரு காரணமா அமைஞ்சிடுது.
அதையும் ஞாபகம் வச்சுக்கோங்க.
உங்களுக்கு பயனுள்ளதா இருந்தா லைக் பண்ணி
கீழ கமெண்ட் செக்ஷன்ல உங்களோட
கருத்துக்களை நீங்க என்ன விதமான
அரிசி எடுத்துக்கறீங்க எவ்வளவு எடுத்துக்கறீங்கங்கறத பதிவிடுங்க.
0 கருத்துகள்